உடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font

தேவையான பொருட்கள்:

பப்பாளிக்காய் துருவல் – அரை கப்,
தேங்காய் துருவல் – கால் கப்,
வெங்காயம் – 2,
கம்பு மாவு – 2 கப்,
தினை குருணை, அரிசிமாவு – தலா கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு,
உப்பு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

அரைப்பதற்கு :

துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல் கடலை – தலா ஒரு கைப்பிடி,
இஞ்சி – சிறுதுண்டு,
பட்டை, கிராம்பு – தலா – 2,
சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் கடலை இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்துகொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பப்பாளிக்காய துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, திணை குருணை, அரிசிமாவு, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய அடையாக ஊற்றி, தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.

சத்தான பப்பாளி – சிறுதானிய அடை ரெடி.

தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, Weight Loss Tips in Tamil, சைவம், தொப்பை குறைய

Leave a Reply


Sponsors