குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ,baby snakes food in tamil

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் – அரை கப்
பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) – கால் கப்
சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) – 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.

இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக… அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).

இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).

பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.

இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors