கறிவேப்பிலை இறால்,prawn curry leaves recipe in tamil samayal

பெரிய இறால் – 10,
மிளகாய்த்தூள் – 20 கிராம்,
தனியாத்தூள் – 20 கிராம்,
சீரகத்தூள் – 10 கிராம்,
சோம்பு தூள் – 10 கிராம்,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 5 பல்,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 1,
பொட்டுக்கடலை – 50 கிராம்,
பொரிக்க தேங்காய் எண்ணெய்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவைக்கு,
வெண்ணெய் – 20 கிராம்,
எலுமிச்சைப்பழம் – 1.

இறாலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். மிக்சியில் பொட்டுக்கடலையை பவுடராக அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் கறிவேப்பிலை வறுத்து ஆறியதும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், கறிவேப்பிலை பொடி, பொட்டுக்கடலை மாவு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறிய இறால் துண்டுகளை பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நன்கு வதக்கி, சிறிது உப்பு, பொரித்த இறால் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும். லேசாக வெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors