கம்பு வெஜிடபிள் கஞ்சி ,Easy kambu Kanji recipe in tamil samayal
தேவையான பொருட்கள் :
ஊறவைத்த கம்பு – அரை கப்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
பிரியாணி இலை – 1,
வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) – 3 கப்,
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்,
பூண்டு – 3 பல்,
உப்பு, மிளகுத் தூள் – சுவைக்கேற்ப,
எலுமிச்சைப்பழம் – அரை மூடி.
செய்முறை :
கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும்.
இதனுடன், வெஜிடபிள் ஸ்டாக், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும்.
பிரியாணி இலையை எடுத்துவிட்டு, வெந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளவும்.
இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: இதில் இரும்புச் சத்து மிக அதிகம். இரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டிய உணவு. குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம்.