முட்டை மாஸ்,egg mass recipe tamil samayal

முட்டை – 3.
தக்காளி – 100 கிராம்
எண்ணெய் – 2 சிட்டிகை.
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
மிளகாய்த் தூள் – 1 சிட்டிகை.
மல்லித் தூள் 2 சிட்டிகை.
உப்பு – தேவையான அளவு.
அத்துடன் ஏதாவது ஒரு மசாலா குழம்பு.

முட்டையை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். நல்லெண்ணெய் விட்டு, கடுகைத் தாளித்து அதில் தக்காளியை வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறவும். வெட்டி வைத்துள்ள முட்டையை இதில் கொட்டி சிறிது நேரம் வேகவைத்து ஏதாவது ஓர் அசைவ குழம்பு அல்லது சைவ குருமாவை லேசாகச் சேர்த்து சுண்டக் கிளறி இறக்கவும்.

Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors