காரைக்குடி இறால் பிரியாணி,karaikudi eral biryani samayal in tamil

தேவையான பொருட்கள்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
இஞ்சி விழுது – 2 டீஸ்பூன்
பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா – அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
எலுமிச்சைப்பழம் -1
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3
சீரகச் சம்பா அரிசி – 300 கிராம்
நெய் – 50 கிராம்
எண்ணெய் – 50 மில்லி
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
இறால் – 300 கிராம்
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செட்டிநாடு மசாலா:
பட்டை – 4
கிராம்பு – 2
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ – 1
கருப்பு ஏலக்காய் – 1
மிளகு – 1 டீஸ்பூன்
மல்லி (தனியா) – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
ஜாதிக்காய் – ஒரு சிட்டிகை

செய்முறை:

செட்டி நாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். இறாலைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

சீரகச் சம்பாவை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு, செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சீரகச் சம்பா அரிசியை வடிகட்டி சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.

அரிசி முக்கால் பதம் வெந்து தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். இதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து, சுத்தம் செய்த இறால் சேர்த்து மூடி போடவும். மூடியின் மேல் கனமான ஒரு பொருளைத் தூக்கி வைத்து குறைந்த தீயில் இருபது நிமிடம் வேக விடவும்.

இருபது நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்

Loading...
Categories: Biryani Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors