கொண்டைக்கடலை மசாலா,kondakadalai masala la

தேவையானவை:

கொண்டைக்கடலை_3 கையளவு (ஒரு நபருக்கு ஒரு கை)
சின்ன வெங்காயம்_4
தக்காளி_4
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_2
பச்சைமிளகாய்_1
சன்னாமசாலா தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்
பெருங்காயம்
எலுமிச்சை சாறு
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
எண்ணெய்

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.மசாலா செய்யப்போகுமுன் கடலையைக் கழுவிவிட்டு,மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அதில் கொஞ்சம் உப்பு போட்டு நன்றாக வேக‌ வைத்து வடித்துக்கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.

தக்காளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் அதில் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.இது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இவையிரண்டும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

அடுத்து கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.அது வதங்கும்போதே மஞ்சள்தூள்,பெருங்காயம்,சன்னாமசாலா தூள்,கொஞ்சமாக உப்பு (கடலையில் ஏற்கனவே உப்பு உள்ளது) சேர்த்து வதக்கி சிறிது தண்னீர் விட்டு, மூடி, மிதமானத் தீயில் கொஞ்ச நேரம் வேகவிடவும்.

பச்சை வாசனை எல்லாம் போய்,தண்ணீர் வற்றி,மசாலா கடலையுடன் கலந்து கமகம வாசனை வந்ததும் எலுமிச்சை சாறுவிட்டு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

இது சப்பாத்தி,நாண் முதலியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors