கோவைக்காய் சிப்ஸ்,kovakkai samayal list in tamil

தேவையான பொருட்கள் :

கோவைக்காய் – கால் கிலோ,
ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் – 150 கிராம்,
எண்ணெய் – 200 கிராம்.

செய்முறை:

கோவைக்காயை நன்றாக கழுவி நான்காக நீளவாக்கில் வெட்டவும்.

ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது) கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்த கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்க்கவும். நன்றாக சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான கோவைக்காய் சிப்ஸ் ரெடி.

குறிப்பு: விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors