குடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை,kudal pun maruthuvam in tamil

சாதாரணமாக சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை.

இதில் விட்டமின்களும், தாது உப்புகளும் மற்றும் அதிக அளவில் ஏ விட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருக்கின்றன.

இத்தகைய மருத்துவ குணம் கொண்ட வெந்தயக் கீரை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடைகின்றன.

வெந்தயக் கீரையின் நன்மைகள்

வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி குணமாகும்.

வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் உடல் சுத்தமாகும்.

வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து அதன் மீது பூசி வருவதின் மூலம் தீக்காயங்கள் குறையும்.

நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது, இந்தக் கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

வெந்தய கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் விரைவில் பழுத்து உடையும்.

வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors