மாம்பழக்குழம்பு,mambala kulambu Seimurai ,cooking tips in tamil

சிறிய மாங்காய் – 1,
பழுத்த மாம்பழம் – 1,
பச்சைமிளகாய் – 8,
தேங்காய்த்துருவல் – 1 கப்,
கெட்டித்தயிர் – 1 கப்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 3,
கடுகு – 1 டீஸ்பூன்,
உப்பு, கறிவேப்பிலை – தேவைக்கு,
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்.

மாங்காயை துருவி தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு மாம்பழ துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மாம்பழம் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து, கொதிக்க ஆரம்பித்ததும் தயிரை மோர் போல் அடித்து ஊற்றி கைவிடாமல் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். உடனே ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து மாம்பழக்குழம்பு கலவையில் கொட்டி மூடி வைக்கவும்.குறிப்பு: விரும்பினால் சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors