மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம் இதோ.. வெற்றிலை – 2 சாம்பார் வெங்காயம் – 2 சீரகம் – 1 ஸ்பூன் பூண்டுபல் – 2 இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள்

 

தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும். வெள்ளைப் பூசணி – 100 கிராம் வெள்ளரி விதை – 10 கிராம் சாம்பார் வெங்காயம் – 2 வெள்ளை மிளகு – 5 கிராம் பூண்டு – 2 பல் பனங்கற்கண்டு – 100 கிராம் இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும். மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும். உணவில் முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பிரண்டை, பாகற்காய், சுண்டைக்காய்,

முருங்கைக்காய், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசோகா கசாயம் அசோகமரப்பட்டை – 20 கிராம் மருதம்பட்டை – 10 கிராம் ஆவாரம் பூ – 10 கிராம் திரிகடுகு பொடி – 10 கிராம் திரிபலா பொடி – 10 கிராம் இவையனைத்தையும் தூள் செய்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்ட வைத்து காலை, மாலை இரவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகவும், சரியான அளவிலும் இருக்கும். அதிக உதிரப் போக்குக்கு சில எளிய மருத்துவக் குறிப்புகள் முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும். மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும். ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து,

 

வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம். மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் (Fibroid) அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும். இந்த கோளாறு உள்ளவர்கள் தக்க மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நிவாரணம் பெறலாம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனாலும் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் உண்டு. இது சாதாரணமாக உதிரப்போக்கு நிற்கும் காலத்திற்கு ஓரிரு வருடங்கள் முன்பாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு.

 

இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் உணவுமுறை மாற்றங்கள் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். மனதை அமைதியான மனநிலைக்கு கொண்டுவர இவ்விரண்டும் உதவும். மேலும் எளிய, சீரணமாகின்ற உணவுகளை சரியான கால அளவில் எடுத்துக்கொள்ளுதல், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பலகாரங்களைத் தவிர்த்தல், நேரம் தவறி உண்பதைத் தவிர்த்தல் இவற்றைக் கடைபிடித்தால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குறைய வழி உண்டு.

Loading...
Categories: Pattivaithiyam

Leave a Reply


Sponsors