நவாபி பிரியாணி,nawavi biryani cooking tips in tamil

தேவையான பொருட்கள்

பாஸ்மதி ரைஸ் – ஒரு கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி- அரை கப்
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 2
நெய் அல்லது எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்

அரைக்க:

புதினா இலைகள் – அரை கப்
பச்சைமிளகாய் – 3
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
இஞ்சி – 2 சிறு துண்டுகள்
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் அல்லது சாதாரண பால் – கால் கப்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மீடியம் சைஸ் க்யூப்களாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய வட்டமான ஸ்லைஸ்களாக வெட்டி கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி இரண்டு க‌ப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடுங்கள். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சீர‌கம், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து லைட் பிரவுனாக நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே வெந்து கொண்டிருக்கும் பச்சைப் பட்டாணிக் கலவையில் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். ஊற வைத்த அரிசியை நீர் வடித்து, இதில் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு சிம்மில் வையுங்கள். 20 முதல் 25 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சூடான பிரியாணி ரெடி. ரைத்தாவோடு பரிமாறினால், மிகவும் சுவையாக இருக்கும்.

Loading...
Categories: Biryani Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors