அருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் ,nellore chicken varuval samayalkurippu

தேவையான பொருட்கள் :

சிக்கன் லெக் பீஸ் – 5 துண்டுகள்
மிளகாய்த்தூள் – 10 கிராம்
சீரகத்தூள் – 5 கிராம்
மிளகுத்தூள் – 5 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
எலுமிச்சைப்பழம் – அரை பழம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 10 கிராம்
இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் – 10 கிராம்
கடலைமாவு – 10 கிராம்
அரிசிமாவு – 5 கிராம்
கார்ன்ஃப்ளார் – 10 கிராம்
வெள்ளை எள் – 5 கிராம்
பெரிய வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 5 கிராம்
குடைமிளகாய் – 50 கிராம்
வெங்காயத்தாள் – சிறிதளவு
காய்ந்தமிளகாய் பேஸ்ட் – 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 3 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது).

மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும்.

அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கி பரிமாறவும்.

Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors