பருப்பு முருங்கை கீரை அடை,paruppu murungai keerai adai recipe

பொருட்கள் :

முருங்கை கீரை – ஒரு கப்,
இட்லி அரிசி – ஒரு கப்,
வெங்காயம் – 1
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு – தலா அரை கப்,
உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன்,
தோல் சீவிய இஞ்சி – சிறிதளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 3,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு களைந்து அதனுடன் மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரவென அரைத்து கொள்ளவும்.

அதனுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, முருங்கை கீரை சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சத்து நிறைந்த பருப்பு முருங்கை கீரை அடைரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors