அன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த சிவப்பான தக்காளி – அரை கிலோ, அன்னாசிப்பழம் – 1 கீற்று, சர்க்கரை – சுவைக்கேற்ப, ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அன்னாசிக் கீற்றை தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியுடன் சர்க்கரை, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்கவிடுங்கள்.

கொதித்து சற்று சேர்ந்தாற்போல, தளதளவென வந்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். நன்கு கொதித்ததும், இறக்கி ரோஸ் எசன்ஸ் சில துளிகள் விட்டுப் பரிமாறுங்கள். குட்டீஸுக்குப் பிடித்தமான இந்தப் பச்சடி, பிரெட் முதல் பீட்ஸா வரை எல்லாவற்றுக்கும் பொருத்தமான காம்பினேஷன்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors