ஹனி சில்லி பொட்டேடோ ,potato recipe s in tamil

நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 250 கிராம்,
உப்பு – 1 டீஸ்பூன்,
தண்ணீர் – 2 கப்,
அரிசி மாவு – 5½ டீஸ்பூன்,
மைதா, எண்ணெய் – தலா 5 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
வெள்ளை எள் – 3½ டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு – 3 பல்,
கீறிய பச்சைமிளகாய் – 3,
நீளமாக நறுக்கிய வெங்காயம் – 1/2,
குடைமிளகாய் – 1/4,
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்,
ரெட் சில்லி சாஸ், மிளகுத்தூள் – தலா 1/2 டீஸ்பூன்,
டொமேட்டோ கெட்சப்,
தேன் – தலா 2 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன் தண்ணீர்,
ஸ்பிரிங் ஆனியன் – சிறிது.

உருளைக்கிழங்கை நீள நீளமாக நறுக்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, மைதா தலா 1 டீஸ்பூன் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் மீதியுள்ள அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உருளைக்கிழங்கை முக்கியெடுத்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வெறும் கடாயில் 2½ டீஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சைமிளகாய், எள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கி வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி உப்பு, சர்க்கரை, சோயாசாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், டொமேட்டோ கெட்சப், தண்ணீர் ஊற்றி கொதித்ததும், கரைத்த கார்ன்ஃப்ளார் கலவை ஊற்றி கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், தேன் சேர்த்து கிளறி கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors