இறால் குல்சாட்,prawn recipes list in tamil
இறால் – 500 கிராம்,
கடலை எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்,
காஷ்மீரி காய்ந்தமிளகாய் – 2,
சிவப்பு, பச்சை குடைமிளகாய் – தலா 1,
ஜுலைன் கட் சில்லி பவுடர் – காரத்திற்கு ஏற்ப,
காய்கறி வேகவைத்த தண்ணீர் – சிறிது,
ஃப்ரெஷ் கிரீம் – தேவைக்கு,
அலங்கரிக்க கொத்தமல்லித்தழை,
ஸ்ப்ரிங் ஆனியன் – தேவைக்கு,
உப்பு – தேவைக்கு.
கடாயில் கடலை எண்ணெயை காயவைத்து காஷ்மீரி காய்ந்தமிளகாயை போட்டு, இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, நறுக்கிய குடைமிளகாய், இறால், ஜுலைன் கட் சில்லி பவுடர் சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கவும். பின்பு காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்த்து திக்கானதும் கொத்தமல்லித்தழை, ஸ்ப்ரிங் ஆனியனை தூவி அலங்கரித்து பரிமாறவும்