தயிர் சேமியா ,thayir seivathu eppadi in tamil

தேவையான பொருட்கள் :

சேமியா – 200 கிராம்
தயிர் – ஒரு கப்,
மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்.

தாளிக்க :

மிளகு – 10,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
காய்ந்த மிளகாய் (கிள்ளியது) – 2

செய்முறை :

சேமியாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.

இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு உருகியதும், தாளிக்கும் பொருட்களை சேர்தது தாளித்து சேமியா கலவையுடன் சேர்க்கவும்.

பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors