துத்திக்கீரை,thuthi keerai keerai benefits in tamil,thuthi keerai Mooligai Maruthuvam

துத்திக் கீரையை தண்ணீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
துத்திக்கீரை உண்பதால் உண்டாகும் நன்மைகள்முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறுபருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

1) குடல் புழுக்கள், வாயுவினால் ஏற்படும் நோய்கள், இடுப்பு வலி ஆகியவை நீங்கும். (ஒரே நாளில் குணமாகும் என்று எதிர்பார்க்கக்கூடாது. தொடர்ந்து மூன்று வாரங்க ளாவது கீரையைச் சாப்பிட்டால்தான் பிணிகள் அகன்று நன்மைகள் படர்ந்துவரும்.)

2) துத்திக்கீரை கஷாயத்தைச் சர்க்கரை சேர்த்துத் தினமும் மூன்று வேளை அருந்தினால் குடல்புண், நீர்ச்சுருக்கு, சொறி, சிரங்கு, காமாலை ஆகிய நோய்கள் குணமாகும்.

3) துத்திக்கீரை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சுண்டக் காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் கரப்பான் நோய் விலகும்.

4) துத்தி இலைக் கஷாயத்துடன் பாலும், சர்க்கரையும் கலந்து உட்கொண்டால், மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு, மேகச் சூடு ஆகியவை குணமாகும்.

5) துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளித்தால் பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

6) முறிந்த எலும்பை ஒட்ட வைக்க இந்தக்கீரை உதவுகின்றது. முறிந்த எலும்பை ஒன்று சேர்த்து அதன்மீது துத்தி இலையை அரைத்து வைத்துக் கட்டி அதன்மீது து ணியைச் சுற்றி, அசையாமலிருக்க மூங்கில் பத்தை வைத்துக் கட்டினால், முறிந்த எலும்பு இணைந்துவிடும்.

7) உங்களுக்குக் கடுமையான சுளுக்கு இருக்கிறதா? சுளுக்கு உள்ள இடத்தில் துத்தியை கீழ் நோக்கி மெதுவாகத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்த பின்னர், வெந்நீர் ஒற்றடம் கொடுங்கள். ஒரு வாரம் செய்யவும். சுளுக்கு, உங்களை விட்டு தளுக்காக ஓடிவிடும்.

8) துத்தி இலையைக் காய வைத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.இது தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு அருமையான மருந்தாகும்.

9) துத்தி இலையை அரைத்து வேனில் கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

10) துத்தி இலையின் சாற்றுடன் பச்சரிசி மாவைக் கூட்டிக் களி கிண்டி, சிலந்திக் கட்டிகளுக்கு வைத்துக் கடடினால் அவை பழுத்து உடையும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors