தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் நடக்கும் அதிசயம் தெரியுமா,udal soodu kuraiya maruthuvam

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படுவது வயிற்றின் தொப்புள் பகுதி, கிட்டத்தட்ட 72,000 நரம்புகள் குவிந்திருக்கின்றன.

கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்கும் போது உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலமே குழந்தையை அடைகிறது.

மேலும் ஒரு மனிதன் இறந்த பின்னும் அவனுடைய தொப்புள் சூடாக இருக்கும் என்று பல அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன.

இத்தகைய தொப்புள் பகுதிகளில் எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் தூங்க செல்வதற்கு முன்பு தொப்புளில் சிறிதளவு விளக்கெண்ணெய் வைப்பதால் கண்பார்வை கோளாறுகள் சரியாகும்.
தினமும் இரவில் விளக்கெண்ணெயை 3 துளி தொப்புளில் விட்டு தொப்புளைச் சுற்றி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி நாளடைவில் குணமாகும்.
உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாக்க தினமும் கடுகு எண்ணெய் 3 துளி தொப்புளில் வைத்தால் குணமாகும்.


உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்கி உடலில் உள்ள நச்சுக்கள் அழிக்க வேப்பெண்ணெயை தினமும் தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன.
உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாக எலுமிச்சை என்ணெய் வைத்தால் தொற்றும் அழிந்துவிடும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி குறைய தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.
பெண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து என்றும் இளமையாக இருக்க தினமும் இரவில் பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors