உடலுக்கு குளிர்ச்சியை தரும் அகத்திக் கீரை சொதி ,agathi keerai sodhi seivathu eppdi

தேவையான பொருட்கள் :

அகத்திக் கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
தேங்காய் பால் – 1 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :

கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும்.

அதில் மறக்காமல் உப்பு, மஞ்சள் துள் சேர்த்துக்கொள்ளவும்.

வெங்காயம் தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

கீரை வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு தேங்காய் பாலை ஊற்றுங்கள்.

பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு இறக்கிவிடலாம்.

அகத்திக்கீரை சொதி தயார்.

இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
Loading...
Categories: Saiva samyal, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors