வாழைப்பூ பச்சடி,valaipoo pachadi samayal in tamil
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு – அரை கப்,
வாழைப்பூ இதழ்கள் – 20,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 3,
பச்சை மிளகாய் – 1,
மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
புளி – சிறு நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி, மோரில் போட்டு வையுங்கள் (கறுத்துப் போகாமல் இருக்கும்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நான்காக கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், வாழைப்பூவையும் சேர்த்து வதக்குங்கள்.
வாழைப்பூ வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்குங்கள். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பையும் மிளகாய் தூளையும் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு இறக்குங்கள். சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான பச்சடி இது.