வீட்டிலேயே முக அழகுக்கு சூப்பரான மாஸ்க் ,veetu azhagu kurippugal

உங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ள வேண்டியவை…

காய்ச்சிய பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யவும். அதன்பின், பொடித்த சர்க்கரைத்தூளை முகத்தில் தேய்த்து, முகம் முழுவதும் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின், ரோஸ்வாட்டரை முகத்தில் அப்ளை செய்து காயவிடவும். அதன்பின், பாலாடையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இறுதியாக, பேஷ் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவவும். மாசு மருவற்ற முகம் பளிச்சென மிளிரும்.

பேஷ் பேக்:

முல்தானிமெட்டி – ஒரு டீஸ்பூன்
வெள்ளரிக்காய் ஜூஸ் – ஒரு டீஸ்பூன்
ரோஸ்வாட்டர் – ஒரு டீஸ்பூன்

இவற்றை ஒன்றாகச் கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு கழுவவும். அல்லது, பாலாடையுடன் குங்குமப் பூ, வெள்ளரிச் சாறு, அரைத்த சந்தனம் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பேக் போட்டுக்கொள்வதன் மூலம் முகம் அழகாக மிளிரும்.

இதனைச் செய்ய நேரம் இல்லை என்பவர்கள், க்ளென்சிங், டோனிங் மாய்சரைஸிங்கை உங்கள் சருமத்துக்கு ஏற்ப க்ரீம் டைப்பாகவோ, ஜெல் டைப்பாகவோ தேர்வுசெய்து பயன்படுத்தலாம். அல்லது, மாதம் ஒருமுறை பார்லரில் சென்று பேஷியல் செய்துகொள்வதன் மூலம், இறந்த செல்களைச் சருமத்திலிருந்து நீக்கி, முகத்தைப் பளிச்சிட செய்யலாம்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors