வெள்ளாட்டு  இறைச்சி பிரட்டல்,velladu curry samayal kurippu in tamil

வெள்ளாட்டு இறைச்சி – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 200 கிராம்,
தக்காளி – 2,
காய்ந்தமிளகாய் – 50 கிராம்,
மிளகு – 10 கிராம்,
சீரகம் – 20 கிராம்,
தனியா- 30 கிராம்,
பச்சைமிளகாய் – 5,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 10,
தேங்காய் – 1/2 மூடி,
சோம்பு – 10 கிராம்,
பட்டை – 1 துண்டு,
கிராம்பு – 5,
ஏலக்காய் – 3,
தேங்காய் எண்ணெய் – 200 மி.லி., நெய் – 50 மி.லி.,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு – தேவைக்கு.

எலும்பு நீக்கிய வெள்ளாட்டு இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். எண்ணெயில்லாமல் வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகை வறுத்து பொடி செய்து கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுது, மட்டன், அரைத்த பொடி போட்டு கிளறி, மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மட்டன் வெந்ததும் தேங்காய்த்துருவல், நெய் ஊற்றி நன்றாக பிரட்டி, தண்ணீர் முழுவதும் வற்றி வறுவறுவென வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்

Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors