வெங்காயத் தாள் சட்னி,vengaya thal chutney Seivathu eppide

றுக்கிய வெங்காயத் தாள் – 200 கிராம்
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 4
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 10 பல்
தேங்காய்த் துருவல் – 50 கிராம்
கொத்தமல்லி, புதினா,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
இஞ்சி – ஒரு துண்டு
பெருங்காயம், மஞ்சள் – கால் ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தக்காளி – 3
எலுமிச்சை – பாதி அளவு

 

செய்முறை

1. வாணலியில் எண்ணெய்விட்டு, வெங்காயத் தாளைப் போட்டு, எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு நன்கு வதக்கவும்.
2. பிறகு மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை அரைத்து, வெங்காயத்தாளுடன் சேர்த்து வதக்கவும்.
3. தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து எடுத்து, லேசாக மசித்துக்கொள்ளவும்.
4. சிறிது எண்ணெய்யில் கடுகு, பருப்பு போட்டுத் தாளித்து, மசியலையும் சேர்த்து, லேசாக கொதிக்கவைத்து இறக்கவும்.

Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors