வெங்காயத்தாள் மசாலா,vengaya thal masala samayal kurippu

தேவையான பொருட்கள்:

வெங்காயத்தாள் 1கட்டு
கேரட் 1
குடைமிளகாய் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன்
தக்காளி 1
பெரிய வெங்காயம் 1
பட்டை,கிராம்பு,ஏலக்காய் தலா 1
கரம் மசாலாபொடி 1ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/4ஸ்பூன்
கொத்தமல்லி கீரை அலங்கரிக்க
எண்ணை 2ஸ்பூன்

செய்முறை :

காய்கள்,வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை பொடியாக கட் செய்யவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு வெங்காயம் சேர்க்கவும்.

 


வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியவுடன் கேரட்,குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்,கரம்மசாலாசேர்த்து ,வதக்கி உப்பு சேர்த்து ஒருகை தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
தண்ணீர் வற்றி காய் வெந்தவுடன் கொத்தமல்லி கீரை சேர்த்து இறக்கவும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors