வெங்காயத்தாள் பருப்பு கூட்டு,vengaya thal paruppu kootu,Cooking Tips In tamil

தேவையான பொருட்கள்

வெங்காயத்தாள் – 3 கட்டு
துவரம் பருப்பு – 100 கிராம்
பாசி பருப்பு – 50 கிராம்
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 8 பல்
எண்ணை – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

 

செய்முறை:

1. வெங்காயத்தாள்,தோகை தனியாக,வெங்காயம்
தனியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியும்
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. குக்கரில் பருப்பு இரண்டையும், மஞ்சள்தூள்
சேர்த்து குழைய வேகவிடவும்.

3. வாணலியில் எண்ணை விட்டு,சூடானதும்
கடுகு,சீரகம்,மிளகாய் தாளிக்கவும்.

4. பூண்டை நசிக்கி போடவும்,வெங்காயம்,உப்பு,
தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

5. நன்கு வதங்கியவுடன் வெங்காயத்தாள்
சேர்க்கவும்.அதனுடன் பருப்புக் கலவை
சேர்த்து கிளறி, ஒரு ஸ்பூன் நெய் விட்டு
இறக்கி விடவும்.சாதம்,சப்பாத்தி,பூரி
எல்லாவற்றிக்கும் நல்ல ஜோடி ரெடி.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors