உங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்

டிப்ஸ் கொஞ்சம் சொல்லட்டுமா! முட்டை வெண்கருவுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடம் ஊறவையுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இரு முறை செய்தாலே போதும். பளிச்சென்று வித்தியாசம் தெரியும். கனிந்த பப்பாளிப்பழத் துண்டை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவலாம். முகம் அப்படியே மின்னும். இரண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்..

அதே அளவு ஆரஞ்சு ஜூஸ் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் மாசுமறுவற்று, பூனை முடிகள் அகன்று முகம் பளபளக்கும். குளிக்கப் போகும்போது ஒரு பெரிய கரண்டி சர்க்கரையும் ஒரு எலுமிச்சம் பழமும் கொண்டுசெல்லுங்கள். உடல் முழுக்க சோப்பு தேய்த்த பிறகு, லெமன் சாறுடன் சர்க்கரை கலந்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளியுங்கள். உடம்பு பட்டுப் போலாகிவிடும். அடிக்கடி தண்ணீர் மாறுவதால் முடி சில சமயம் கொட்டத் தொடங்கும். சில பேருக்குப் பொடுகுத் தொல்லையும் ஏற்படுவது உண்டு. அதைக் கட்டுப்படுத்த சில வழிகள்: ¼ டீஸ்பூன் லெமன் ஜூஸில் இரண்டு டீஸ்பூன் வினிகர் கலந்து மண்டையில் நன்கு மசாஜ் செய்து, பின்னர் எக் ஷாம்பூ போட்டுக் குளிக்க வேண்டும். ‘பொடுகுத் தொல்லை இனியில்லை’ என்று பாடுவீர்கள்.

Loading...
Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors