இறால் ஃப்ரை,erall fry tamil tips

இந்த இறால் ஃப்ரையை நாங்கள் சென்னை அம்ஜிகரையில் பேச்சுலராக இருந்த சமயத்தில் எங்கள் வீட்டு சமையல் செய்யும் மேகலா அக்காவின் கைபக்குவமே இந்த இறால் ஃப்ரை.

இந்த ஃப்ரையை சாம்பார் சாதம் , ரசம் சாதம் , தயிர் சாதம், பிரிஞ்சி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் எதனுடனும் சேர்த்து வைத்து சாப்பிட டக்கராக இருக்கும்.

அந்த சமையல் நுணுக்கத்தை கற்று கொண்டு இன்றும் எனது குடும்பத்தாரை இது மாதிரியான உணவு வகைகளை செய்து பேஸ் பேஸ் என்ற பாராட்டுகளை பெற்று வருகிறேன்.

நீங்களும் பெற ஒரு அரிய வாய்ப்பு.

தேவையான பொருட்கள்
பெரிய இறால் 500 கிராம் ( சுத்தம் செய்யப்பட்டது )
கடல் உப்பு தேவையான அளவு
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
வர கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி ( பொடியாக நறுக்கியது )
கறிவேப்பிலை 8 ( பொடியாக நறுக்கியது )
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி

செய்முறை
1. சுத்தம் செய்யபட்டப்பின் இறாலை நன்றாக சூர வாடை நீங்கும் வரை கழுவவும்.

2. இதில் உள்ள நீரை முடியும் அளவுக்கு வடித்து விட வேண்டும்.

3. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்யப்பட்ட இறாலில் கடல் கல் உப்பை பொடி செய்து அதில் தேவையான அளவை சேர்த்து கொஞ்சம் பிசிறி கொள்ளவும்.

4. அதில் இஞ்சி மற்றும் பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பிசிறி 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ள வேண்டும்.

5. அதில் வரமிளகாய் தூள் , மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லி தூளை சேர்த்து நன்றாக பிசிறி 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

6. அதில் கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.

7. ஒரு இரும்பு வடச்சட்டியை அடுப்பில் வைத்து அதை மரசெக்கு கடலெண்ணய் நன்றாக காய்ந்ததும் அதில் ஊறவைத்துள்ள மசாலா இறாலை போட்டு நன்றாக சுண்டும் வரை சிறுதீயிலேயே வைத்து கிளறவும்.

8. நன்றாக சுண்டி இறால் வெந்ததும் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையை தூவி இறக்கவும்.

9. இறாலை இறக்கும் முன் அதில் 1/2 மேஜைக்கரண்டி நாட்டு மாட்டு பசு வெண்ணையை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

Loading...
Categories: Chettinad Recipes Tamil

Leave a Reply


Sponsors