உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் அடை, surakai ada tamil

தேவையான பொருட்கள் :

சுரைக்காய்த் துருவல் – 2 கப்

சீரகச் சம்பா அரிசி – ஒரு கப்
துவரம்பருப்பு – அரை கப்
கடலைப்பருப்பு, முழு உளுத்தம்பருப்பு – தலா கால் கப்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித்தழை –  சிறிதளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம்  – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள், மீதமுள்ள இரண்டு மிளகாய் தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், சுரைக்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும். சுரைக்காய் மசாலா தயார்.

அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி தண்ணீரில் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

எட்டு மிளகாயைத் தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும்.

நன்றாக ஊறியதும் அரிசி, பருப்பைக் களைந்து, ஊறவைத்த மிளகாய்,  உப்பு, புளி சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

இதனுடன் சுரைக்காய் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி,  சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான சுரைக்காய் அடை ரெடி.

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors