செட்டிநாட்டு மீன் குழம்பு,cheddi nadu meen kulambo

தேவையானவை

மீன் 8 துண்டுகள்
பூண்டு 15 பல்
சின்ன வெங்காயம் 100 கிராம்
தக்காளி 4
புளி எலுமிச்சை அளவு
சீரகத்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சாம்பார் பொடி 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
நல்லெண்ணெய் 1 ஸ்பூன்
சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் சிறிதளவு

செய்முறை

கழுவிய மீன் துண்டுகளில் மஞ்சள்தூள், உப்பை கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றி சீரகம், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். பின் பூண்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் சீரகத்தூளை சேர்க்கவும். ஒரு 5 நிமிடம் வதக்கிய பிறகு நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கி 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு சேர்த்து மேலும் 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது ஊற வைத்த மீன் துண்டுகளை சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து சில நிமிடங்கள் வேக வைக்கவும். மீன் வெந்திருச்சான்னு செக் பண்ணி பாருங்க… அவ்வளவுதான்… மல்லித்தழையை அப்படியே தூவி விட்டீங்கன்னா செம டேஸ்ட் செட்டிநாட்டு மீன் குழம்பு ரெடி…! அப்புறம் என்ன.. இன்னைக்கு சண்டே. காலையில சுடச்சுட இட்லி செஞ்சு, செட்டிநாட்டு மீன் குழம்பை தொட்டு சாப்பிட்டு பாருங்க… 2 இட்லி எக்ஸ்டிரா உள்ளே போகும்… கொஞ்சம் குழம்பை சேர்த்து வச்சால், மதியம் கிச்சனுக்கு ரெஸ்ட்

Loading...
Categories: Chettinad Recipes Tamil

Leave a Reply


Sponsors