உங்களுக்கு சுவையான இறால் 65 செய்ய வேண்டுமா…,erall 65 tamil tips

தேவையான பொருட்கள்:

இறால் – 1/2 கிலோ
அரிசி மாவு – 2 ஸ்பூன்
கான்ப்ளார் – 1 ஸ்பூன்
மைதா – 1 ஸ்பூன்
முட்டை – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சீரகப் பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

நடுத்தர அளவில் இருக்க கூடிய இறாலை தேர்வு செய்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கொஞ்சம் தண்ணீருடன் சேர்த்து ஒரு கலவையாக கலக்க வேண்டும். அந்த பேஸ்ட்டில் இறால்களை சேர்த்து நன்றாக கலந்து, ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இப்போது காரமான, சுவையான மற்றும் மிருதுவான இறால் 65 தயார்.

 

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors