முட்டை கொத்து சப்பாத்தி,muttai kothu ,tamil samayal kothu

நீங்களும் செய்து பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.

தேவையான பொருட்கள்
சப்பாத்தி 4 ( பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் 2 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
மட்டன் குழம்பு 4 கரண்டி
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
கரம்மாசாலா தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1/2 மேஜைக்கரண்டி
குருமிளகு தூள் 1/4 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
நாட்டு கோழி முட்டை 6
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி ( பொடியாக நறுக்கியது)
கடல் உப்பு தேவையான அளவு
நாட்டு மாட்டு பசு வெண்ணை 2 மேஜைக்கரண்டி
மரசெக்கு கடலேண்ணய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை
1. ஒரு அகன்ற கெனமான இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துகோங்க .

2. அது நன்றாக பொன்னிறமாக மாறிய உடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு சிறிது நொடிகள் வதக்கவும்.

2.1. அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அதனுடன் அனைத்து பொடி வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறவும். தேவையான உப்பை சேர்த்து நன்கு கிளறவும்.

3. அதில் மெல்லிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு கிளறவும்.

4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பழைய சப்பாத்தியை சேர்த்து அதில் மட்டன் குழம்பையும் சேர்த்து அதில் முட்டைகளையும் உடைத்து ஊற்றி சிறிது தேவையான அளவிளான உப்பை சேர்த்து நன்றாக ஜல்லிகரண்டியில் கொத்தி கொத்தி சிறுதீயிலேயே கிளறவும்.

5. நன்றாக வதங்கி உதிரி உதிரியாக வந்ததும் அதில் நாட்டு மாட்டு பசு வெண்ணையை சேர்த்து நன்கு சிறுதீயிலேயே கிளறவும்.

6. பிறகு பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.

Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors