சைதாப்பேட்டை மாறி ஓட்டல் வடகறி,vada curry tamil samayal

கடலைப்பருப்பு – அரைக் கிலோ.
ஏலக்காய் – 5.
கிராம்பு – 5.
பட்டை, லவங்கம் – 25 கிராம்.
சோம்பு – 50 கிராம்.
மஞ்சள்தூள் – 10 கிராம்.
தனியாத்தூள் – 50 கிராம்.
மிளகாய்ப்பொடி – 50 கிராம்.
உப்பு – தேவையான அளவு.
பெரிய வெங்காயம் – 300 கிராம்.
தக்காளி – 200 கிராம்.
புதினா – இரண்டு கைப்பிடி.
கடலெண்ணெய் – தேவையான அளவு.
இஞ்சி – 50 கிராம்.
பூண்டு – 100 கிராம்.
பச்சை மிளகாய் – 50 கிராம்.

பக்குவம்:

1.கடலைப்பருப்பை அரை நாள் ஊற வைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைக்கவும்.

2.அடி கனமான வடைச் சட்டியில் கடலெண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு விழுதை தட்டியது போல பொரித்து எடுங்கள்.

3.அரை வேக்காட்டு பதமாக இருக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைக்கவும். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை பொடித்து வைக்கவும்.

4.தனியாக கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, அதில் இஞ்சி – பூண்டு விழுது, பட்டை – சோம்பு பொடி கலவையைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.

5. நன்றாகக் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு வடையைச் சேர்த்து, சுண்டக் காய்ச்சுங்கள்.

6. இறுதியாக புதினா இலையைத் தூவி, இறக்குங்கள். பட்டை, கிராம்பு, சீரகத்தை சரியான பதத்தில் சரியான அளவில் போட வேண்டும்.

7. இதன் பக்குவம் மாறினால் போச்சு. இதன் வாசனை மட்டும்தான் தனித்து தெரியும்.

சரியான வடகறி

8.இப்போதெல்லாம் உணவகங்களில் வடகறிக்குப் பொரித்த வடை பயன்படுத்தப்படுவதில்லை.

9.மாவை பக்கோடா பிடிப்பது போல வடிவற்ற உருண்டையாகப் பிடித்து இட்லி கொப்பரையில் வேகவைத்து எடுத்து விடுகிறார்கள்.

10.பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு வகையறாக்களைப் போட்டு வதக்கி, இதை அதன்மீது கொட்டிச்சேர்த்துக் கிளறி, வாசனைக்கு சோம்பு, பட்டை, லவங்கம் சேர்த்து விடுகிறார்கள்.

11. இது தவறான செய்முறை. அரைத்த கடலைப் பருப்பு கலவையை சிறு சிறு வடையாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுப்பதே உண்மையான வடகறி பதத்துக்கு பொருந்தும்.

12. உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுகலாகவும் இருக்க வேண்டும். முக்கால் பங்கு வெந்ததுமே எடுத்துவிட வேண்டும்.

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors