குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65 muttai 65 tamil samayal

தேவையான பொருள்கள் :

முட்டை – 3

சோளமாவு – 2 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
புட் கலர் – 1/4 தேக்கரண்டி
தயிர் – 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு நான்காக வெட்டி வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கீழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும்.

இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் வடிந்த பின்னர் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

சுவையான முட்டை 65 ரெடி.
Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors