ஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்!,tamil beauty tips makeup tamil maruthuvam beauty tips tamil beauty tips new beauty tips on tamil tamil beauty tips pimples

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் உண்டு. ஆய்லி ஸ்கின், டிரை ஸ்கின், சென்சிட்டிவ் ஸ்கின் என்று, சருமத்தின் குறைகளை நிவர்த்தி செய்யும் பிரத்யேக காஸ்மெடிக் பொருட்களைத் தேர்வு செய்வதும் அவசியம்!”னு சொல்றாங்க, சென்னை கிழக்குத் தாம்பரம், ‘ஃபெமினா’ பியூட்டி சலூனின் சீனியர் பியூட்டிஷியன் ரியா. நோட் இட்!


ஆய்லி ஸ்கின்

ஏற்கெனவே எண்ணெய்ப் பசையுள்ள ஆய்லி ஸ்கின்னுக்கு கண்டிப்பா மாய்ஸ்ச்சரைஸர் ஆகாது. அது பருக்களுக்கு வழிவகுக்கும். இவங்க ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை முகம் கழுவுவதுடன், ட்ரையான ஃபேர்னெஸ் க்ரீம் ப்ளஸ் மாய்ஸ்ச்சர் குறைவா உள்ள காஸ்மெடிக்ஸ் பயன்படுத்தலாம். காஜல், லிப் க்ளாஸ் விருப்பத்தைப் பொறுத்துத் தேர்வு செஞ்சுக்கலாம். இந்த வகை ஸ்கின்னுக்கு பேர்ள் ஃபேஷியல், டைமண்ட் ஃபேஷியல் நல்ல ட்ரீட்மென்ட்டா அமையும்.

ட்ரை ஸ்கின்

சரும வறட்சியைத் தவிர்க்க, இவங்க அதிக மாய்ஸ்ச்சர் இருக்கும் காஸ்மெடிக்ஸ் பயன்படுத்தலாம். க்ரீம் அதிகமாக உள்ள க்ளாஸி மேக்கப் இவங்களுக்கு சூட் ஆகும். டிரை ஸ்கின்னுக்கான, பிரத்யேக கோல்ட் ஷேட் இருக்கும் ஃபவுண்டேஷன் நல்ல சாய்ஸ். இந்த வகை ஸ்கின்னுக்காக பியூட்டி ட்ரீட்மென்ட்கள்… கோல்டு மற்றும் அரோமா ஃபேஷியல்.

நார்மல் ஸ்கின்

நார்மல் ஸ்கின் இருக்கிறவங்க, சாதாரணமா ஒரு ஃபேர்னஸ் க்ரீம் ப்ளஸ் ஒரு காம்பேக்ட் பயன்படுத்தினா போதும். முக்கியமான பார்ட்டிக்கு, ஒரு ‘மேக்’ ஃபவுண்டேஷன் உடன் காம்பேக்ட்டை பயன்படுத்தலாம்.

சென்சிட்டிவ் ஸ்கின்

சென்சிட்டிவ் ஸ்கின், எப்பவும் கொஞ்சம் எச்சரிக்கையோட கையாள வேண்டியது. பொதுவா இவங்களும் நார்மல் ஸ்கின் போலவே ஒரு தரமான ஃபேர்னஸ் க்ரீம், காம்பேக்ட், மேக் ஃபவுண்டேஷன்னு பயன்படுத்தலாம். இவங்க 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபேஸ் க்ளீன் அப் செய்யலாம்.

Loading...
Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors