வீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil

தேவையான பொருட்கள் :

மாங்காய் இஞ்சி – 1 கப்

பச்சை மிளகாய் – 3
எலுமிச்சம்பழம் – 1
கடுகு – 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணய் – தேவையான அளவு

செய்முறை :

மாங்காய் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாங்காய் இஞ்சி துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து நன்றாக கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளித்து அதில் மங்காய் இஞ்சிக் கலவையை சேர்த்து கிளறவும்.

முப்பது நிமிடங்கள் வரை நன்றாக கிளறிய பின்னர் பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.

மா இஞ்சி ஊறுகாய் ரெடி.
Categories: சைவம்

Leave a Reply


Sponsors