இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும் ! (21.02.2019)

விளம்பி ஆண்டு – மாசி 9 – வியாழக்கிழமை (21.02.2019)
நட்சத்திரம் : பூரம் காலை 7.49 வரை பின்னர் உத்திரம்
திதி : துவிதியை மாலை 5.37 வரை பின்னர் திருதியை
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 10.30 – 11.30

வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)
சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

மேஷ ராசி நேயர்களே, ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும்.

ரிஷப ராசி நேயர்களே, மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். சொந்த பந்தங்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. மனதில் போட்டு வைத்த புது திட்டம் செயல் வடிவம் பெரும். எதிரிகள் விலகி நிற்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே, பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தன லாபம் கூடும்.

சிம்ம ராசி நேயர்களே, உறவினர்கள் உங்களை ஆதரித்து பேசுவர். முக்கிய சமயங்களில் அனுபவ அறிவை வெளிப்படுத்தவும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியபாரத்தில் உயர்ந்த நிலையை எட்ட முடியும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களை கவனமாக கையாளவும். நட்பு வட்டம் விரிவடையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக் கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தம் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்க்கவும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நெருங்கியவரிடம் மனக்குறைகளை பகிர்ந்துகொள்ளவும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் நட்புடன் பழகுவர்.

கும்ப ராசி நேயர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நீண்ட நாள் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வதந்திகளை பொறுப்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

Loading...
Categories: guru peyarchi palangal

Leave a Reply


Sponsors