ஏழு மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான நுண்ணுயிர் கொல்லி (ஆன்டிபையோட்டிக்ஸ்)

 

எப்போதெல்லாம் நாம் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறோமோ, மருத்துவர்கள் எப்போதும் ஒரு சில ஆன்டிபையோடிக்ஸ் நமக்கு பரிந்துரைப்பார். ஆனால் உங்களுக்குத் தெரியுமா இயற்கையாகவே ஒரு சில உணவு பொருட்களுக்கு இயற்கை ஆன்டிபையோடிக்காக இருக்கிறது என்று?!

ஏழு மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான ஆன்டிபையோடிக்ஸ்-

 

1) மஞ்சள்

பண்டைய காலத்தில் இருந்து இந்திய சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் கிடைக்கும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் அதை மிகவும் பயனுள்ள ஆன்டிபையோடிக்காக ஆக்குகிறது. மஞ்சளுக்கு குணப்படுத்தும் தன்மை இருக்கிறது மேலும் அது பாக்டீரியாவிற்கு எதிராகவும்கூட செயல்படும் காரணி ஆகும்.

 

2) பூண்டு

பூண்டில் இருக்கும் பூண்டு நீர்மம்(அலிசின்), அதை ஆற்றல்மிக்க இயற்கை ஆன்டிபையோடிக்காக ஆக்குகிறது. இதனுடன் சேர்த்து, பூண்டில் ஆன்டிவைரல், ஆன்டி-பங்கள் மற்றும் ஆன்டிமைக்ரோபையல் தன்மைகள் இருக்கிறது. அதில் இயற்கை ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மிகையாக இருப்பதால், பூண்டு ஒரு உறுதியான நோய் எதிர்ப்பு அமைப்பிற்கு ஆதரவு தருகிறது.

3) இஞ்சி

அறிவியல் சமூகம் இஞ்சியை மற்றுமொரு இயற்கையான ஆன்டிபையோடிக்காக அங்கீகரிக்கிறது. நிறைய அறிவியல் படிப்புகள் தொடர்ந்து இஞ்சியின் இயற்கையான பாக்டீரியாவின் பல விகார திறனை எதிர்த்து சண்டையிடுவதை செயல் விளக்கமளித்துள்ளது. இஞ்சி உடம்பில் உள்ள தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.

4) வெங்காயம்

ஆன்டிஆக்சிடன்ட்ஸ்க்கு மிகச் சிறந்த ஆதாரங்களில் ஒன்று வெங்காயம். சுதந்திர அணுக்கள் உடலை சேதம் செய்வதில் இருந்து ஆன்டிஆக்சிடன்ட்ஸ் பாதுகாக்கிறது, அது ஒரு உறுதியான நோய் எதிர்ப்பு நிலைக்கு வழிவகுக்கிறது.

5) தேன்

தேன் ஒரு இயற்கையான ஆன்டிபயோடிக் அது பண்டைய காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. தேனில் பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. அது நாள்பட்ட புண்களுக்கும் மற்றும் தீக்காயங்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது. அது உடலில் இருந்து நோய்த்தொற்றை வெளியேற்றவும் உதவுகிறது.

6) ஆப்பிள் சிடர் வினீகர்

ஆப்பிள் சிடர் வினீகரில் அசிட்டிக் அமிலம், மாலிக் அமிலம், கனிம உப்பு, அமினோ அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை இருக்கிறது. இந்த எல்லா பொருட்களின் முன்னிலையில் ஆப்பிள் சிடர் வினீகர் மிகவும் சக்திவாய்ந்த இயற்கை ஆன்டிபயோடிக்காகும்.

7)  முள்ளங்கி வேர்(ஹார்ஸ்ரேடிஷ் ரூட்)

மற்ற நறுமண பொருட்களை ஒப்பிட்டுப்பார்க்கையில் முள்ளங்கி வேரில் உயர்ந்த எண்ணிக்கையில் மருத்துவரீதியான செயல் கலவை இருக்கிறது-அவை அனைத்தும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. முள்ளங்கி வேர் நோய்த்தொற்றை குறைக்கிறது, பாக்டீரியாவை எதிர்க்கிறது, வைரஸை எதிர்கிறது மேலும் நோய் எதிர்ப்பு நிலையைகூட ஊக்குவிக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட ஆன்டிபயோடிக்ஸ் மிகுந்த ஆற்றலும் மற்றும் சக்தியும் கொண்டது. எனினும், இந்த ஆன்டிபயோடிக்கை பொறுத்தவரை சிறந்த விஷயம் அவை 100 சதவிகிதம் இயற்கையானது!

 

ஆதாரங்கள்: ப்ராம்பில் பெர்ரி, குயூர்ஜாய், பிரஸ்ட்கிரை பாரெண்டிங், புட் மேட்டர்ஸ், லைவ்சயின்ஸ், எம்பிஜி ஹெல்த், மெடிக்கல் நியூஸ் டுடே, மதர் நேச்சர் நெட்ஒர்க், ஸ்டைல்கிரேஸ், டேஸ்ட்சென்ஸ், தி அகாடமி ஆப் கலிநரி நுட்ரிஷன், தி ஹோல் டெய்லி, வெல்த்தி தெரபியூடிக்ஸ்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors