குழந்தைகளின் எடை அதிகரிக்க ஏழு ஆலோசனைகள்

 

தமது குழந்தைகள், அவர்கள் தேர்ந்தெடுத்துச் செய்யும் வேலையில் சிறப்புற்று, உடல் நலத்தோடு இருப்பதைதான் எல்லா பெற்றோரும் விரும்புவார்கள்.  ஆனால், குழந்தைகளை சத்துள்ள ஆகாரங்களை உண்ணச் செய்வது ஒரு பெரும் போராட்டமாகும். அங்குமிங்கும் ஓடி ஒளிந்து சாப்பிடுவதைத் தவிர்க்கும் குழந்தைகளுகாக,  சத்தான உணவுகளை சமைத்து அவர்களை உண்ணவைக்கப் படாதபாடு படும் தாய்மார்கள், உடல் வலிமையிழந்துவிடுமே என்று அச்சப்படுவது நம் எல்லோர் வீட்டிலும் நடப்பதே. இந்த சூழ்நிலையில் எப்படி குழந்தைகளின் எடையை அதிகரிக்கச் செய்வது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள, சுவைமிக்க, உடல் எடையை அதிகரிக்கக் கூடிய ஏழுவித பதார்த்தங்களின் செய்முறையை படிக்கத்தொடருங்கள்:

 

1.வாழைப்பழம், ஓட்ஸ்(புல்லரிசி), பேரீட்சை கலந்த அடுமனை உருண்டைகள்:

வாழைப்பழத்தில் கார்போ ஹைட்ரேட்களும், பேரீட்சைப்பழத்தில் இயற்கையான சர்க்கரைச் சத்தும், ஓட்ஸில் வயிற்றுக்குத் தேவையான சத்தும் இருப்பதால் இந்த மூன்றும் கலந்து செய்த பண்டம் குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடும் உணவாகும்.

செய்முறை அறிய இங்கே சொடுக்கவும்

 

2) கோழி இறைச்சி கலந்த சாதப் பூக்கள்:

சிக்கன் சூப், சாதத்தால் பூக்களைப்போல அலங்கரிக்கப்பட்ட இந்த உணவை குழந்தைகள் விரும்புவார்கள்

செய்முறை அறிய இங்கே சொடுக்கவும்

 

3)ஓட்ஸ் (புல்லரிசி) மற்றும் உலர் பழ லட்டு:

எல்லா குழந்தைகளுக்கும் லட்டு பிடிக்கும். அதனை விரும்பி உண்பார்கள்

செய்முறை அறிய இங்கே சொடுக்கவும்

 

4) சர்க்கரை உருளை நிரப்பிய செங்கொடி முந்திரி (ஸ்ராபெர்ரி):

ஸ்ட்ராபெர்ரி அனைத்து குழந்தைகளும் விரும்பும் பழமாகும். அதனால், அவர்கள் இந்த சுவைமிக்க பதார்த்தத்தை

மிகவும் விரும்புவார்கள்

செய்முறை அறிய இங்கே சொடுக்கவும்

 

5)கேழ்வரகு மற்றும் உளுந்து பணியாரம்:

தோசையை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.  கேழ்வரகு, உளுந்து கலந்து செய்யப்படும் இந்த தோசைப் பணியாரத்தையும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்

செய்முறை அறிய இங்கே சொடுக்கவும்

 

6) முட்டை, கோழியிறைச்சி, சீஸ் கலந்த சான்ட்விச்:

முட்டை, சிக்கன் மற்றும் சீஸ் கலந்த சான்ட்விச் குழந்தைகள் விரும்பும் உணவாகும்.குழந்தைகள் அதை ஒரே விழுங்கில் உண்டுவிடுவார்கள்

செய்முறை அறிய இங்கே சொடுக்கவும்

 

7) பாஞ்சீரி எனப்படும் பஞ்சாபி இனிப்பு:

உருக்கிய வெண்ணெய் (நெய்), கோதுமை மாவு மற்றும் உலர் பழங்களால் செய்யப்படும் இந்த பண்டம் சுவைமிக்கதும், சத்துள்ளதுமாகும்

செய்முறை அறிய இங்கே சொடுக்கவும்

 

இந்த சத்தான உணவுகளைச் செய்து கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தைகளின் எடையை எளிதாக அதிகரிக்கச் செய்யலாம்.  இதைப்போல, இதர சத்தான உணவுகள் குறித்த செய்முறைகள் உங்களுக்குத் தெரிந்தால், அதனை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Loading...
Categories: Udal Edai Athikarikka Tips in Tamil

Leave a Reply


Sponsors