கிரில்டு டோஃபு செய்வது எப்படி,tamil samayal tips tamil nadu

vதேவையான பொருட்கள் :

டோஃபு – 250 கிராம்,

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கடுகு விழுது – 1 டீஸ்பூன்,
கடலை மாவு – 1/4 கப்,
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்,
தயிர் – 1/2 கப்,
கையில் கசக்கிய ஓமம் – 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
காஷ்மீர் மிளகாய்த்தூள் – தேவைக்கு,
கரம்மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிது,

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

டோஃபுவை பெரிய சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து இறக்கி ஆறவிடவும்.

ஒரு பாத்திரத்தில் டோஃபு, கடலை மாவு கலவை, வெண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து, டோஃபு உடையாமல் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

பின்பு கிரில் தவாவை மிதமாக சூடு செய்து டோஃபுவை அதில் போட்டு தேவையான வெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்து சாட் மசாலா தூவி சூடாக பரிமாறவும்.

சூப்பரான கிரில்டு டோஃபு ரெடி.

Loading...
Categories: Kerala Samayal Tamil

Leave a Reply


Sponsors