உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கும் உணவுப் பட்டியல்

 

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் உடற்பயிற்சிகள் இன்றியும் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆதலால் நீங்களும் உடற்பயிற்சிகளின்றி உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைத்தால் உங்களுக்கான கட்டுரைதான் இது.

காலை எழுந்ததும் அரை மணி நேரம் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்த தண்ணீரை அருந்துங்கள். அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள். வெது வெதுப்பான நீரையும் அருந்தலாம். காஃபி அல்லது டீ போன்ற காலை தேநீர் எதையும் அருந்தக் கூடாது. அவற்றை காலையில் மட்டும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆனால் மற்ற வேலைகளில் அருந்தலாம்.

காலை உணவை அரசனைப் போல் உண்ண வேண்டும் என்பார்கள். நீங்கள் அப்படியே உண்ணுங்கள். ஆனால் அதில் புரோட்டீன் சத்துகள் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் கார்போ ஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அது கொழுப்பாக உடலில் தங்கி உடல் எடையைக் கூட்டிவிடும். அதனால் ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் உண்ணலாம். உப்புமா, சிறு பருப்பு தோசை, எண்ணெய் சேர்க்காத ரொட்டி, ஆம்லெட், பன்னீர் போன்றவற்றைத் தொட்டுக் கொள்ளலாம். எண்ணெய் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துடுங்கள்.

மதியம் நிச்சயம் உங்களுக்கு அளவுகடந்த பசி எடுக்கலாம். அதை ஈடு செய்யும் வகையில் பவுல் நிறைய காய்கறிகள் அல்லது பழங்களின் சாலட் சாப்பிடலாம். அதோடு முட்டை, வேக வைத்த சிக்கன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சமையல் எண்ணெய் தவிர்த்து ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். கார்போ ஹைட்ரேட் குறைந்த சிவப்பு அரிசியை உட்கொள்ளலாம். அதற்கு ப்ரோட்டீன் நிறைந்த குழம்பு சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை ரொட்டி மற்றும் எண்ணெய் சேர்க்காத பருப்புக் குழம்பு போன்றவையும் உண்ணலாம். எண்ணெய் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துடுங்கள்.

மாலையில் ஒரு கப் காஃபி அல்லது டீ அருந்தினால்தான் ரெஃப்ராஷாக இருக்கும்.இருப்பினும் எண்ணெயில் வறுத்த சமோசா, பஜ்ஜி என உண்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் ஆப்பிள், நட்ஸ் வகைகள், வேக வைத்த கடலைகள் போன்றவற்றை உண்ணுங்கள்.

இரவு உணவிற்கு என தனியாக சமைக்க வேண்டாம். மதியம் என்ன உணவு எடுத்துக் கொண்டீர்களோ அதையே இரவும் உண்ணுங்கள்.

தூங்கும் முன் பசி எடுப்பதுபோல் இருந்தால் சூடாக ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். இந்த டயட்டை தினமும் பின்பற்றினால் போதும் உங்கள் கண்களை நீங்களே நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையில் நிச்சயம் மாற்றம் கிடைக்கும்.
Loading...
Categories: Pattivaithiyam, தொப்பை குறைய

Leave a Reply


Sponsors