சூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி போண்டா

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – ஒரு கப்

உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 5
கேரட், கோஸ் – தலா ஒரு கைப்பிடி
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.

இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஊறவையுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், காய்கறித் துருவல், உப்பு, புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

இந்தக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து,வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

சூப்பரான ஜவ்வரிசி போண்டா ரெடி.
Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors