மீன் அன்னம் /தேங்காய் பாலுடன் மீன் குழம்பு ,Meen Aanam ,fish Curry With Coconut Milk in Tamil

மீன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish curry in Tamil )

  • அரைக்க (தேங்காய் விழுது )
  • தேங்காய் : 1 கையளவு
  • சின்ன வெங்காயம் : 10
  • தாளிக்க :
  • கடுகு : 1 மேஜைக்கரண்டி
  • சின்ன வெங்காயம் : 2
  • கருவேப்பிலை : சிறிதளவு
  • வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி
  • மீன் ( சால்மன் / சங்கரா அல்லது உங்களுக்கு விருப்பமான மீன் )
  • நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  • உப்பு : தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் : 5
  • தக்காளி : 1
  • பூண்டு : 5 – 6 பல்
  • மிளகாய் : 2
  • மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  • குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
  • புளி : நெல்லி அளவு

மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Fish curry in Tamil

  1. மீன் ஐ சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து தனியே வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, பூண்டு (5 பல்), வெங்காயம் (5 ) , தக்காளி சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  3. மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  4. தேவையான தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் ஊற்றி 10 – 15 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
  5. பின் மீன் துண்டுகள் , உப்பு  சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும் .
  6. அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 – 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை அனைக்கவும் .

எனது டிப்:

குழம்பிற்கு நல்லெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும் …உடம்பிற்கும் நல்லது .

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil

Leave a Reply


Sponsors