யூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

உத்திரபிரதேசத்தின் பாஹ்ரைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், கோராக்பூரில் வசித்து வருகிறார். அவர் அங்கிருந்தபடி அரசு தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார். பிலாண்ட்புர் என்னும் பகுதிக்கு அவர் மாறினார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண் தங்கியிருந்த அறையிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் அப்பெண்ணின் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அந்த இளம்பெண் குழந்தை பெற்ற நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அப்பெண்ணின் அருகில் இருந்த செல்போனை காவல் துறையினர் எடுத்துப் பார்த்ததில் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான வீடியோ ஓடி உள்ளது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors