வஞ்சிர மீன் வறுவல்/ சீர் மீன் வறுவல் , Vanjaram Meen Varuval,Seer Fish Fry in Tamil

 

வஞ்சிர மீன் வறுவல்/ சீர் மீன் வறுவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vanjaram Meen Varuval/Seer Fish Fry in Tamil )

 • வஞ்சிர மீன் – 8-10 துண்டுகள்
 • மஞ்சள் தூள் –2 தேக்கரண்டி
 • சிவப்பு மிளக்காயத்தூள்-1 1/2 தேக்கரண்டி
 • மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
 • மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
 • ஜீரகத்தூள் -1 தேக்கரண்டி
 • இஞ்சிப்பூண்டு விழுது -2 தேக்கரண்டி
 • தயிர் – 1 தேக்கரண்டி
 • எலுமிச்சை சாறு – 1 சிறிய எலுமிச்சியிலிருந்து
 • அரிசி மாவு – 1 தேக்கரண்டி
 • சோள மாவு – 1 தேக்கரண்டி
 • உப்பு – சுவைக்காக
 • எண்ணெய் – கடாயில் வறுப்பதற்காக ஏறக்குறைய 3-4 தேக்கரண்டி
 • கரிவேப்பிலை இலைகள் – கொஞ்சம்
 • சோம்பு/ சான்ஃப் – 1 தேக்கரண்டி

வஞ்சிர மீன் வறுவல்/ சீர் மீன் வறுவல் செய்வது எப்படி | How to make Vanjaram Meen Varuval/Seer Fish Fry in Tamil

 1. மீனை சுத்தமாகக் கழுவி சுத்தப்படுத்தவும். தட்டி உலர வைத்து, எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. அகலமானத் தட்டையான தட்டை எடுத்து, ‘சேர்வைப்பொருளில்’ குறிப்பிட்ட அனைத்து மசாலாக்களையும் சேர்த்து ஒரு மிருதுவான சாந்தைத் தயாரிக்கவும்.
 3. ஒவ்வொரு மீனாக எடுத்து மெதுவாக மேலே தயாரிக்கப்பட்ட சாந்தை முழுவதுமாகப் பூசவும்.
 4. ஒரு கடாயை எடுத்து எண்ணெயை சூடுபடுத்தவும். இவற்றோடு கறிவேப்பலையையும் சோம்பையும் சேர்க்கவும்.
 5. நடுத்தரமானத் தீயில் மீனைத் திருப்பித் திருப்பி பக்கங்கள் வேகும்வரைக்கும் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இதே முறையில் அனைத்து மீன்களையும் வறுக்கவும்.
 6. சமையலறை வடிகட்டியில் வடிகட்டி சூடாகப் பரிமாறவும். மீன் குழம்பு அல்லது சாம்பார் அல்லது மிளகு ரசத்துடன் பரிமாறும்போது யம்மியாக இருக்கும்.
Loading...
Categories: அசைவம்

Leave a Reply


Sponsors