2019 இல் இதுதான் நடக்குமாம்…!! உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் மகா தீர்க்க தரிசியின் அதிசயக் கணிப்புகள்….!

 

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்துக் கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார்.

ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை திறன் குறைந்து பின்னர் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.இருப்பினும், பாபா வாங்கா கணித்துக் கூறும் ஒவ்வொரு நிகழ்வும் சரியாக நடந்துள்ளது. இவர் 1996-ஆம் ஆண்டு தன்னுடைய 85 வயதில் உயிரிழந்தார்.ஆனால், அதற்கு முன்னதாக பல விடயங்களை முன்கூட்டியே கணித்து கூறியுள்ளார்.குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதே போன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.

அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார்.

பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார்.இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார். அதுவும் நடந்தது.இதுவும் தற்போது உண்மையாகவே நிகழ்ந்துள்ளது. இப்படி இவர் கூறும் விடயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர்.அந்த வகையில் தற்போது 2018-ஆம் ஆண்டு முடிந்து 2019-ஆம் ஆண்டு வரவுள்ளது. இதனால் அடுத்த 12 மாதங்கள் என்ன நடக்கும் என்பதில் பாபா வங்கா என்ன கணித்துள்ளார் என்பதை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். அதுமட்டுமின்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது படுகொலை முயற்சி ஏற்படும் குறிப்பிட்டுள்ளார்.இவர் குறிப்பிடுவதைப் போன்று, சமீபத்தில் புடின் தனக்கென்று ஒரு தனியாக பாதுகாப்பான அணியை வைத்துள்ளார் என்று செய்தி வெளியானது.ஆனால், அது குறித்து எந்த உறுதியான தகவல் இல்லை. தற்போது பாபா வங்காவின் கணிப்பில் படுகொலை செய்யப்படலாம் என்று கூறப்படுவதால், அதற்காக இந்த பாதுகாப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், ஆசியாவில் மிகப்பெரிய சூனாமி ஏற்படுமாம். 2004-ஆம் ஆண்டு எப்படி ஒரு சுனாமி பாதிப்பு இருந்ததோ அதே போன்ற பாதிப்புக் இருக்குமாம். இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் விண்கல் வந்து விழும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.புடினோடு விடவில்லை, அவர் டிரம்பை பற்றி சொன்ன கணிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டிரம்ப் ஒரு மர்மநோயால் பாதிக்கப்படுவார் என்று கணித்துள்ளார், அது செவிடாக இருக்கலாம் அல்லது மூளைக் காய்ச்சல் நோயாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக பாபா வங்கா கணித்துள்ள கணிப்புகளில் 68 சதவீதம் உண்மையாக நடந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Loading...
Categories: தமிழ்

Leave a Reply


Sponsors