ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ

சீரக சம்பா அரிசி – அரை கிலோ
பச்சை மிளகாய் – 10
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
பால் – கால் லிட்டர்
தயிர் – 100 மில்லி
எண்ணெய் – 50 மில்லி
நெய் – 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்  – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி – பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.

தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil

Leave a Reply


Sponsors