இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல்! கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா

இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் இன்று குண்டுவெடிப்பில் 150க்கும் மேற்பட்டவர்கள் பலியானது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதிகா இந்த சம்பவத்தில் இருந்து உயிர்தப்பியதாக தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் பற்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமா துறை பிரபலங்கள் பலரும் இது பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகை ஸ்ரீப்ரியா இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், மர்மநபர்கள் சிலர் அதை கிண்டல் செய்து ட்விட்டரில் கேவலமாக கமெண்டு செய்து வருகிறார்களாம்.

அவர்கள் பற்றி கோபமாக மீண்டும் பதிவிட்டுள்ளார் ஸ்ரீப்ரியா “இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் tweetற்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமானcomment களை பதிவு செய்யும் மனிததன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான்block செய்வேன்…இதுப்போன்றவர்கள் …..😡😡” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...
Categories: News

Leave a Reply


Sponsors