கெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ

தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு  பராமரிக்கப்படும்.

தேவையான பொருட்கள் :

கொய்யா இலை – 5
டீத்தூள் – அரை டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
ஏலக்காய் – 2

நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் டீத்தூள், கொய்யா இலை, ஏலக்காய் போட்டு மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வடிகட்டி பருகவும்.

சத்தான கொய்யா இலை டீ ரெடி.

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors